ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் – தனுஷ்கோடி கடல் பகுதியில் கடலோர கடற்படையினர் துப்பாக்கி சூடு பயிற்சி மேற்கொண்டு வருவதால், அக்., 28-ம் தேதி திங்கள்கிழமை, மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல்படையினர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘ராமேஸ்வரம் முதல் தனுஷ்கோடி வரை இந்திய கடலோர காவல்படையினர் துப்பாக்கிச் சூடு பயிற்சி மேற்கொண்டு வருவதால், மீனவர்கள் இப்பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம்.
அக்டோபர் 28 திங்கட்கிழமை காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரை பாக் ஜலசந்தி பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.