திருச்சி: பழைய ஓய்வூதியத் திட்டத்தை நிறைவேற்றாவிட்டால் ஜன.6 முதல் தொடர் வேலை நிறுத்தம் செய்யப்படும் என்று ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது.
தமிழக முதல்வர் பழைய பென்ஷன் திட்டம் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் – திருச்சியில் ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் சண்முகநாதன் பேட்டி
ஜாக்டோ ஜியோ பேரமைப்பின் சார்பில் இன்று தமிழக முழுவதும் 11அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் நீலகண்டன், நாகராஜ், குமரவேல். உதுமான்அலி, பால்பாண்டி, சோ.நவநீதன் ஆகியோர் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. இப்போராட்டத்தில் போராட்ட உரையை ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் சண்முகநாதன் வழங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் குமரவேல், டேவிட்லிவிங்ஸ்டன், செல்வராணி, ஆரோக்கியராஜ் உட்பட 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு மாநில ஒருங்கிணைப்பாளர் சண்முகநாதன் அளித்த பேட்டி: புதிய ஊதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வு திட்டத்தை அறிவிக்க வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடுகள் கல்லூரி ஆசிரியர்கள், மற்றும் முதலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடுகள், ஆசிரியர்களுக்குரிய ஊக்க ஊதியம் உடனடியாக வழங்க வேண்டும், தமிழகத்தில் உள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பு வேண்டும் உள்ளிட்ட பத்தாம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்து வருகிறோம்.
தமிழக முதல்வர் தேர்தல் அறிக்கையில் கூறியவாறு அறிவிக்கவில்லை என்றால் ஜாக்டோ ஜியோ பேரமைப்பு வருகிற 27ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் தொடர் வேலை நிறுத்த மாநாட்டை நடத்த உள்ளனர். மேலும் ஜனவரி 6-ம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தை திட்டமிட்டுள்ளோம். எனவே தமிழக முதல்வர் உடனடியாக அழைத்துப் பேச வேண்டும் இல்லையென்றால் ஜனவரி 6ஆம் தேதி தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தார்.
மேலும், ஏற்கனவே ஆண்ட அதிமுக தேர்தல் அறிக்கையில் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் என்ற வார்த்தையே இல்லை, மத்தியில் ஆண்டு கொண்டிருக்கிற பிஜேபி பழைய ஓய்வூதியம் வாக்குறுதியை ரத்து செய்ய வேண்டும் என கூறுகின்றனர்.