மதுரை: உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தனபாலன் தாக்கல் செய்த மனு:-
திண்டுக்கல் மாநகராட்சி மன்ற உறுப்பினராக உள்ளேன். தமிழ்நாடு ஓபன் டெண்டர் அறிவிப்பு சட்டத்தின்படி, டெண்டர் அறிவிப்பு உள்ளூர் செய்தித்தாள்களில் விளம்பரம் செய்யப்படும். மேலும் அதிக விலைக்கு ஏலம் எடுத்தவருக்கு ஏலம் ஒதுக்கப்பட வேண்டும்.
திண்டுக்கல் மாநகராட்சி சார்பில் காமராஜர் பேருந்து நிலையத்தில் 34 கடைகளை வாடகைக்கு எடுப்பதற்கான ஏல அறிவிப்பு 2022 நவ.17-ம் தேதி நடைபெற்றது.
இதற்கான ஏல அறிவிப்பை உள்ளூர் நாளிதழ்களில் வெளியிட வேண்டும். ஆனால், அது செய்யப்படவில்லை. கோவை பதிப்பில் வெளியாகியுள்ளது. 34 கடைகளுக்கு ஏலம் நடந்தது. இதில் 47 பேர் மட்டுமே கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு வெளிப்படைத்தன்மை ஏல அறிவிப்பு சட்டத்தின்படி, ஏலத்திற்கு 15 நாட்களுக்கு முன்னதாக உள்ளூர் அல்லது மாவட்ட அளவிலான செய்தித்தாள்களில் விளம்பரம் கொடுக்கப்பட வேண்டும். பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.
ஆனால், காமராஜர் பேருந்து நிலையக் கடைகளுக்கான ஏலம் அவ்வாறு நடைபெறவில்லை. எனவே, திண்டுக்கல் காமராஜர் பேருந்து நிலையத்தில் உள்ள 34 கடைகளுக்கான ஏல அறிவிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும்.
மேலும் அதை ரத்து செய்து மீண்டும் ஏல அறிவிப்பை வெளியிட்டு முறையாக நடத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் அவர் கூறியிருந்தார். இந்த மனு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, ஏல அறிவிப்புக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. பின்னர், 34 கடைகளுக்கான ஏலத்தை ரத்து செய்து புதிய அறிவிப்பு வெளியிடவும், விதிகளை பின்பற்றி வெளிப்படைத்தன்மையுடன் ஏலம் நடத்தவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.