குற்றாலம்: குற்றாலத்தில் களைகட்டிய சாரல் திருவிழாவில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
குற்றாலத்தில் கடந்த 16ம் தேதி தொடங்கிய சாரல் திருவிழாவில் பங்கேற்க, சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துக் காணப்பட்டது.
இரவு நேரத்தில் மெயின் அருவியின்மேல் பல வண்ண விளக்குகள் ஒளிரவிடுவதை சுற்றுலாப் பயணிகள் ரசித்துச் சென்றனர். கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளையும் பார்வையாளர்கள் கண்டுகளித்தனர்.