திண்டிவனம்: திண்டிவனத்தில் சொத்து நகல் கிடைக்க தாமதம் ஆனதால் மாவட்டப் பதிவாளர் அலுவலகக் கதவைப் பூட்டி இளைஞர் ஒருவர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், குடும்ப சொத்துப் பத்திரத்தின் நகல் கிடைக்கக் காலதாமதான நிலையில், சிறுதலைப்பூண்டியைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர், பத்திரப்பதிவுத் துறையின் மாவட்ட பதிவாளர் அலுவலகக் கதவுகளைப் பூட்டி போராட்டம் நடத்தினார்.
இதையடுத்து, நாளை (இன்று காலை) மாவட்டப் பதிவாளர் பணிக்கு வந்தவுடன் பத்திர நகல்கள் கட்டாயம் வழங்கப்படும் என ஊழியர்கள் தரப்பில் தெரிவித்தனர்.
இதையடுத்து அந்த இளைஞர் போராட்டத்தை கைவிட்டுப் புறப்பட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.