சென்னை: அ.தி.மு.க., பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்ட அறிக்கை:- பெண்களை இழிவுபடுத்தும் நோக்கில், வனத்துறை அமைச்சர் பொன்முடி, சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், சைவ, வைணவ மத அடையாளங்களை இணைத்து, பெண்களை இழிவுபடுத்தும் வகையில் கருத்து தெரிவித்தார்.

பொன்முடியின் இத்தகைய கருத்துகளை வன்மையாக கண்டிக்கிறேன். பொன்முடிக்கு எதிராக அதிமுக மகளிரணி சார்பில் சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே வரும் 16-ம் தேதி காலை 10 மணிக்கு போராட்டம் நடத்தப்படும். அதிமுக மகளிரணி செயலாளர் பா.வளர்மதி தலைமையில், அமைப்புச் செயலாளர் கோகுல இந்திரா முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
மகளிரணி தலைமைச் செயலாளர்கள், மகளிர் எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள், மாநில அளவில் பல்வேறு பதவிகளில் பணியாற்றும் பெண் நிர்வாகிகள் உள்பட அனைத்து பெண்களும் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும்.