சென்னை: தமிழகத்தில் செயல்படும் அனைத்து மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டம் சென்னை தொமுச அலுவலகத்தில் எச்எம்எஸ் தேசிய தலைவர் கே.ஏ.ராஜஸ்ரீதர் தலைமையில் நடந்தது.
கூட்டத்தில், நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அகில இந்திய அளவில் வெற்றி பெறச் செய்த வாக்காளர்களுக்கும், அதற்காக அயராது உழைத்த அனைத்துத் தொழிலாளர்கள், விவசாயத் தோழர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. 3 குற்றவியல் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி மத்திய அரசுக்கு எதிராக போராடி வரும் வழக்கறிஞர்களின் போராட்டத்திற்கு தொழிற்சங்கங்கள் ஆதரவு அளிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
4 தொழிலாளர் விரோத சட்டங்களை திரும்பப் பெற வேண்டும், 3 குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும், தொழிற்சங்க கோரிக்கைகளை நிதிநிலை அறிக்கையில் சேர்க்கக் கோரி, ஜூலை 24ல் அனைத்து மாவட்ட தலைநகரங்கள் மற்றும் தொழில் மையங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளின் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்க வேண்டும்.
மேலும், மாஞ்சோலை தேயிலை தோட்டத்தில் பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் தொழிலாளர் குடும்பங்களின் வாழ்வுரிமையை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் தமிழக அரசுக்கு கடிதம் அனுப்ப முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில் எம்.சண்முகம் தொமுச, கே.ஏ.ராஜஸ்ரீதர் எச்.எம்.எஸ்., எம்.ராதாகிருஷ்ணன் ஏ.ஐ.டி.யு.சி., ஜி.சுகுமாரன் சி.ஐ.டி.யு., டி.வி.சேவியர் ஐ.என்.டி.யு.சி., வி.சிவக்குமார் ஏ.ஐ.டி.யு.சி., எம்.திருநாவுக்கரசு ஏ.ஐ.சி.சி.டி.யு., எஸ்.மாயாண்டி டி.யு.சி.சி.