தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் நேற்று மாலை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரை கண்டித்து அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரிடம் அரசு ஊழியர் சங்க மாநிலத்தலைவர் கோரிக்கை மனு கொடுக்கும் போது மனுவை கசக்கி தூக்கி எறிந்து உதாசீனம் செய்ததை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேபோல் தஞ்சாவூர் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாநில தலைவரின் கோரிக்கை மனுவை உதாசீனம் செய்வது போல் நடந்து கொண்டு அவமரியாதை செய்த பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரை கண்டித்து நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.