புதுக்கோட்டை : திருமயத்தில் தனியார் உணவகத்தில் சிக்கன் பிரியாணி சாப்பிட்ட 25 மாணவ, மாணவிகளுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டதால் பரபரப்பு உருவானது.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு எதிரே உள்ள கடையில் சிக்கன் பிரியாணி சாப்பிட்ட 25 மாணவ, மாணவிகளுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு வெவ்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
சிலம்ப போட்டியில் பங்கேற்க பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவ, மாணவிகள் சென்றிருந்த நிலையில், உணவு பற்றாக்குறையால் போட்டி ஏற்பாட்டாளர்கள் அருகே இருந்த கடையிலிருந்து சிக்கன் பிரியாணி வாங்கி தந்ததாக கூறப்படுகிறது.
இந்த சிக்கன் பிரியாணியை சாப்பிட்ட மாணவ, மாணவிகள் வயிற்றுப்ோக்கால் அவதிப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். இதையடுத்து உணவு பாதுகாப்புத் துறையினர் ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை எழுந்துள்ளது.