முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக எம்பியுமான ஜெகத்ரட்சகன், சட்டவிரோதமாக பணம் அனுப்பிய வழக்கில், அமலாக்க இயக்குனரகம் ரூ. 908 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டில், ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது குடும்பத்தினர் சட்டவிரோதமாக பணம் அனுப்பியதாக குற்றம் சாட்டப்பட்டனர். இதையடுத்து, அவரது வீடு மற்றும் பிற இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையின் போது, வெளிநாடுகளில் சட்டவிரோதமாக முதலீடு செய்தது கண்டுபிடிக்கப்பட்டதால், ரூ.89.19 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டன. இந்த விசாரணையின் அடிப்படையில் அவருக்கு ரூ.908 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது உறவினர்களுக்கு சொந்தமான சொத்துகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில், கணக்கில் வராத பணம் மற்றும் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
வரி ஏய்ப்பு மற்றும் சட்ட விரோத பணப் பரிமாற்றம் தொடர்பான வழக்கில், அவருக்கு இப்போது இவ்வளவு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.