சென்னை: சென்னையில் இரண்டு வழித்தடங்களில் 54 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் தினமும் சுமார் 3 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர். மெட்ரோ ரயில் பயணிகளுக்கு நம்பகமான மற்றும் பாதுகாப்பான பயணத்தை வழங்குகிறது. இதனால் மெட்ரோ ரயில்களில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதன் மூலம் இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் 90 லட்சத்து 83 ஆயிரத்து 996 பேர் பயணம் செய்துள்ளனர். அதேநேரம், செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், ஒரு லட்சத்து 93 ஆயிரத்து 701 பயணிகள் குறைவாகவே பயணம் செய்துள்ளனர். அக்டோபர் 6-ம் தேதி அதிகபட்சமாக 4 லட்சத்து 42 பேர் பயணம் செய்துள்ளனர். இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:-
கடந்த அக்டோபரில் 40 லட்சத்து 75 ஆயிரத்து 666 பேர் க்யூ.ஆர்.கோட் டிக்கெட் முறையை பயன்படுத்தினர், 28 லட்சத்து 88 ஆயிரத்து 168 பேர் பயண அட்டை, 4,287 பேர் டோக்கன், 5,400 பேர் குரூப் டிக்கெட் முறையை பயன்படுத்தினர். சென்னை கார்டு (தேசிய 20 லட்சத்து 50 ஆயிரத்து 699 பேர் பொது இயக்க அட்டையைப் பயன்படுத்தி மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்).
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் க்யூஆர் குறியீடு டிக்கெட் மற்றும் பயண அட்டை, வாட்ஸ்அப் டிக்கெட் உள்ளிட்ட கட்டணங்களில் 20 சதவீதம் தள்ளுபடி வழங்குகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.