காஞ்சிபுரம்: ஏற்றுமதியில் தேசிய அளவில் காஞ்சிபுரம் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
நடப்பு நிதி ஆண்டில் முதல் 7 மாதங்களில், அதிக சரக்கு ஏற்றுமதி செய்த மாவட்டங்களில் பட்டியலில் தேசிய அளவில் காஞ்சிபுரம் இரண்டாவது இடம் பிடித்துள்ளது
சென்னை புறநகர் மாவட்டங்களில் ஒன்றாக காஞ்சிபுரம் மாவட்டம் இருந்து வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம், ஒரகடம், படப்பை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.
உலக அளவில் உள்ள முன்னணி நிறுவனங்களின் தொழிற்சாலைகளும் சாம்சங், உண்டாய் தொழிற்சாலை, யமஹா தொழிற்சாலை, ஐ-போன் உற்பத்தி தொழிற்சாலைகள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இயங்கி வருகின்றன.
தமிழ்நாட்டு அளவில் காஞ்சிபுரம் மாவட்டம் பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்து, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில் முன்னணி மாவட்டமாக இருந்து வருகிறது. இந்திய அளவிலும் காஞ்சிபுரம் மாவட்டம் ஏற்றுமதியில் முதன்மை மாவட்டமாக இருந்து வருகிறது. தமிழகம் இந்திய அளவில் ஏற்றுமதியில், முன்னணி மாநிலமாக இருப்பதற்கும் காஞ்சிபுரம் முக்கிய பங்காற்றி வருகிறது.
நடப்பு நிதி ஆண்டில் முதல் 7 மாதங்களில், அதிக சரக்கு ஏற்றுமதி செய்த மாவட்டங்களின் பட்டியலில் தேசிய அளவில் காஞ்சிபுரம் மாவட்டம் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து மின்னனு பொருட்கள், வாகனங்கள், வாகனங்களின் உதிரி பாகங்கள் மற்றும் எந்திரங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. நடப்பு நிதி ஆண்டில் ஏற்றுமதியில் தமிழ்நாடு இந்திய அளவில், மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது
இந்தியாவில் குஜராத் மாநிலத்தின் ஜாம்நகர் 1.57 லட்சம் கோடி ரூபாய், மதிப்பிலான பொருட்களை ஏற்றுமதி செய்து முதலிடம் பிடித்துள்ளது. அதற்கடுத்த இடத்தில் காஞ்சிபுரம் மாவட்டம் 93,240 கோடி ரூபாய் மதிப்பில் ஆன பொருட்களை ஏற்றுமதி செய்து இரண்டாம் இடம் பிடித்துள்ளது. புனே, கௌதம் புத்தன் நகர் மற்றும் பெங்களூர் நகர்புறம் ஆகியவை அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளது.
நடப்பு நிதியாண்டில் 7 மாதங்களில் குஜராத் மாநிலத்தில் 4.33 லட்சம் கோடி ரூபாய் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் 2.56 லட்சம் கோடி ரூபாய் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இரண்டு 2.09 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் 1.35 லட்சம் கோடி ரூபாய் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. உத்தரபிரதேசம் மாநிலத்திலிருந்து 83,000 ஆயிரம் கோடி மதிப்பில் அனுப்புங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலம் 27 சதவீதத்தை ஏற்றுமதியில் தனது பங்கை நிலை நிறுத்தி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் 16 சதவீதமும், தமிழகம் 13 சதவீதமும், கர்நாடகா 8 சதவீதம் மற்றும் உத்தர பிரதேச 5 சதவீதத்தையும் பிடித்துள்ளது.