By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    ஈரானின் புதிய உச்ச தலைவராக மொஜ்தபா காமேனி தேர்வு
    1 Min Read
    தெஹ்ரானில் பற்றி எரிகிறது எண்ணெய் கிடங்கு
    0 Min Read
    போர் தொடரும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டவட்டம்
    0 Min Read
    ஈரான் எண்ணெய் கிடங்குகள் மீது சரமாரி தாக்குதலால் பதற்றம்
    1 Min Read
    ஈரானின் ஏவுகணைகள், டிரோன்களை அழித்ததாக பஹ்ரைன் தகவல்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    கொரோனா தடுப்பூசி பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்கணும்… உச்சநீதிமன்றம் உத்தரவு
    1 Min Read
    கார் விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்த யூடியூபர் அனுராக் டோவல்
    1 Min Read
    அசாமில் ஏற்பட்ட விமான விபத்தில் விமானப்படை வீரர்கள் இருவர் உயிரிழப்பு
    1 Min Read
    ஈரானை தாக்க இந்திய துறைமுகங்களை பயன்படுத்தும் அமெரிக்கா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி
    1 Min Read
    ரஷ்யாவிடம் இருந்து S400 அமைப்புகள் ஐந்து எண்ணிக்கையில் வாங்கும் இந்தியா
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    தென் தமிழகத்தில் நாளை மழைக்கு வாய்ப்பு இருக்காம்… அறிவிச்சு இருக்காங்க!!!
    1 Min Read
    பறக்கும் ரெயில் சேவை தொடங்குமா? அதிகாரிகள் சொல்வது என்ன?
    1 Min Read
    விசாரணைக் கைதி ஆகாஷ் உயிரிழந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி.-க்கு மாற்றம்
    1 Min Read
    தர்பூசணி அதிகமாக சாப்பிட்டால் ஏற்படும் உடல்நல கோளாறுகள்
    1 Min Read
    காலை உணவுக்கு வெறும் ஜூஸ் மட்டும் குடிக்கலாமா? தெரிந்து கொள்ளுங்கள்
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: மற்றவர்களை விட சற்று ஸ்பெஷலாக இருக்க வேண்டுமா? அப்போ இதை பாலோ செய்யுங்கள்!!!
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > தமிழகம் > மற்றவர்களை விட சற்று ஸ்பெஷலாக இருக்க வேண்டுமா? அப்போ இதை பாலோ செய்யுங்கள்!!!
தமிழகம்

மற்றவர்களை விட சற்று ஸ்பெஷலாக இருக்க வேண்டுமா? அப்போ இதை பாலோ செய்யுங்கள்!!!

Nagaraj
Last updated: April 19, 2025 1:25 pm
By Nagaraj 3 Min Read
Share
SHARE

சென்னை: எப்போதும் நாம் மற்றவர்களை விடத் தோற்றத்தில் மற்றும் வயதில் இளமையாக இருக்க வேண்டும் என்று தான் ஆசைப்படுகிறோம். அதேபோல் ஆஃபீஸ் சென்றாலும் வெளி இடங்களுக்குச் சென்றாலும் மற்றவர்களை விட சற்று ஸ்பெஷலாக இருக்க வேண்டும் என்று தான் ஆசைப்படுவோம். இதற்கு நீங்கள் விலையுயர்ந்த ஆடைகளையே அல்லது மேக்கப் சாதனங்களையோ வாங்க வேண்டிய அவசியமில்லை.

தூங்குதல் மிக முக்கியமான ஒன்று நீங்கள் தினமும் தேவையான அளவு நிம்மதியான தூக்கத்தை மேற்கொள்ள வேண்டும். நீங்கள் போதுமான அளவு தூக்கத்தை மேற்கொள்ளவில்லையென்றால் உங்கள் உடலில் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. முதலில் உங்கள் கண்களுக்குக் கீழே கருவளையங்கள், இமைவீக்கம் மற்றும் உடல் ஆற்றல் இழத்தல் ஆகிய பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

மேலும் தூங்க செல்லும் போது மொபைல் மற்றும் டிவி போன்றவற்றைத் தள்ளிவைத்து விட்டு நிம்மதியான தூக்கத்தை மேற்கொள்ளுங்கள். நிம்மதியான தூக்கத்தை பெற வேண்டுமானால் உங்கள் மெத்தையின் தேர்வும் முக்கியம்.

அடுத்து மிக முக்கியமான ஒன்று உங்கள் உணவைத் திட்டமிட்டு உண்பது. நீங்கள் உண்ணும் உணவில் பெரும்பாலும் கார்போஹைட்ரெட் மற்றும் சர்க்கரைகள் இருந்தால் அது உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. உங்களை நீங்களே விரும்பாத அளவிற்கு விரைவில் கொழுப்புகள் உடலில் சேரும். இந்த உணவுகள் உங்கள் உடல் எடையை அதிகரித்து உங்கள் சருமத்தையும் பாதிக்கும். எனவே ஆரோக்கியமான உணவை உட்கொள்ளுவதை கடைப்பிடியுங்கள். இந்த ஆரோக்கியமான உணவுகள் உங்களின் உடல் நல ஆரோக்கியத்தையும் சருமத்தையும் பாதுகாக்கும்.

நீங்கள் உண்ண வேண்டிய ஆரோக்கியமான உணவுகளைப் பற்றி முதலில் ஒரு அட்டவணையைத் தயார் செய்து கொள்ளுங்கள். இதற்காக நீங்கள் முழுமையாக உங்களின் உணவுப் பழக்கத்தை மாற்ற வேண்டும் என்ற அவசியமில்லை. நீங்கள் உண்ணும் உணவில் சிறு சிறு மாற்றங்களை முதலில் கொண்டுவாருங்கள். எடுத்துக்காட்டாக அடிக்கடி பாஸ்ட் புட்களைச் சாப்பிடுகிறீர்கள் என்றால் அதனைத் தவிர்த்து பழங்கள் மற்றும் காய்கறிகளைச் சாப்பிடுங்கள். நீங்கள் ஆரோக்கியமான உணவுகளை உண்ண ஆரம்பித்த பிறகு உங்கள் உடலில் நடக்கும் மாற்றங்களை நீங்களே உணருவீர்கள்.

உங்களின் உணவுக் கட்டுப்பாட்டுடன் மிகவும் முக்கியமான ஒன்று உடற்பயிற்சி செய்வது. தினமும் குறைந்தது அரை மணி நேரமாவது உடற்பயிற்சி செய்வது அவசியம். முதலில் நீங்கள் உடற்பயிற்சி செய்ய ஆரம்பிக்கும் போது உங்களின் உடல் எடை குறையும். உங்கள் உடலின் தோற்றத்தை நீங்கள் மாற்ற விரும்பினால் கண்டிப்பாக உடற்பயிற்சியை கடைபிடியுங்கள். அத்துடன் ஆரோக்கியமான உணவை உண்ணுவதை கடை பிடியுங்கள். உங்கள் தோற்றத்தில் நீங்கள் மாற்ற விரும்பும் மிகப்பெரிய விஷயம் உடல் எடை என்றால், ஆரோக்கியமான உணவு மற்றும் வழக்கமான உடற்பயிற்சியும் சிறந்த வழி.

நீங்கள் சாப்பிடுவதை விட அதிகமான கலோரிகள் உடற்பயிற்சி செய்வதன் மூலம் வெளியேற்றப்படும் இதனால் நீங்கள் விரைவில் உங்கள் எடை இழக்க முடியும். உங்களுக்கு உடற்பயிற்சி செய்ய விருப்பம் இல்லையெனில் நடைப்பயிற்சி, ஜாகிங் மற்றும் யோகா போன்றவற்றை செய்யலாம். உங்களுக்குப் பிடித்த ஒன்றைத் தேர்வு செய்து அவற்றை கடைப்பிடியுங்கள்.உடற்பயிற்சி செய்வதன் மூலம் உங்கள் இரத்தத்தில் எண்டோர்பின்களை வெளியிடுகிறது. இந்த எண்டோர்பின்கள் உங்கள் மனநிலையை மேம்படுத்தும். உங்களுக்கு ஏற்படும் இந்த நல்ல மனநிலையினால் தன்நம்பிக்கையை அதிகரிக்கும். அத்துடன் உடற்பயிற்சி செய்யும் போது ஏற்படும் வேர்வை பற்றிக் கவலை கொள்ளாதீர்கள் உங்களுக்கு எவ்வளவு வேர்க்கிறதோ உங்கள் உடலுக்கு அவளோ நன்மை உள்ளது.

ஆடைகளில் உங்களுக்குப் பொருத்தமான ஒன்றைத் தேர்வு செய்யுங்கள். நீங்கள் அணியும் ஆடை புதிய டிரெண்ட் ஆன ஆடையாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. உங்கள் தோற்றத்திற்கும் உடலுக்கும் எது பொருத்தமாக இருக்கும் என்று உங்களுக்குத் தெரியும் அவற்றைத் தேர்வு செய்து அணியுங்கள். நீங்கள் முறையான உடற்பயிற்சி மற்றும் சரியான உணவு முறையை கடைப்பிடித்து உடல் எடை குறைந்தால் மீண்டும் உங்களுக்கு பொருத்தமான ஆடையை வாங்கி அணியுங்கள்.

You Might Also Like

தென் தமிழகத்தில் நாளை மழைக்கு வாய்ப்பு இருக்காம்… அறிவிச்சு இருக்காங்க!!!

பறக்கும் ரெயில் சேவை தொடங்குமா? அதிகாரிகள் சொல்வது என்ன?

விசாரணைக் கைதி ஆகாஷ் உயிரிழந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி.-க்கு மாற்றம்

தர்பூசணி அதிகமாக சாப்பிட்டால் ஏற்படும் உடல்நல கோளாறுகள்

காலை உணவுக்கு வெறும் ஜூஸ் மட்டும் குடிக்கலாமா? தெரிந்து கொள்ளுங்கள்

TAGGED:clothingHealthMakeupSpecialYouthஆடைகள்ஆரோக்கியம்இளமைமேக்கப்ஸ்பெஷல்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
சமையல் குறிப்புகள்

ஆரோக்கியம் நிறைந்த கொத்தமல்லி புலாவ் செய்முறை

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?