திருவனந்தபுரம்: சபரிமலை கோவிலில் புதிய ஐயப்பன் சிலையை நிறுவ திருவிதாங்கூர் தேவசம் போர்டு அனுமதி அளித்ததாகக் கூறி, ஈரோட்டைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் தமிழ்நாட்டில் நன்கொடை வசூலிப்பதாக தேவசம் போர்டுக்கு புகார் வந்தது.
இந்த மனுவை விசாரித்த கேரள உயர்நீதிமன்ற நீதிபதிகள் அனில் கே. நரேந்திரன் மற்றும் முரளி கிருஷ்ணா ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், ஈரோட்டைச் சேர்ந்த மருத்துவருக்கு நோட்டீஸ் அனுப்பி, நன்கொடை வசூலிப்பதைத் தடுத்தது, கேரள காவல்துறை விசாரிக்க உத்தரவிட்டது.

மேலும் சபரிமலை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் அனுமதியின்றி ஏதேனும் சிலைகள் நிறுவப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு உத்தரவிட்டது.
உயர் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, ஏடிஜிபி ஸ்ரீஜித் தலைமையிலான போலீசார் நன்கொடை வசூல் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். ஈரோடு உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் விசாரணைகளை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.