சென்னை: வாழ்க்கை நிச்சயமற்றது, எதிர்காலம் என்னவாக இருக்கும் என்பதை ஒருபோதும் கணிக்க முடியாது. நீங்கள் இல்லாத நேரத்தில் உங்கள் குடும்பம் நிதி ரீதியாகப் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்து இருக்கிறீர்களா. அப்ப நீங்க இன்னும் டேர்ம் இன்சூரன்ஸ் திட்டத்தைத் தேர்வுசெய்யலையா?
டேர்ம் லைஃப் இன்சூரன்ஸ் திட்டங்கள் மிக அடிப்படையான, செலவு குறைந்த மற்றும் வாங்குவதற்கு எளிதான ஆயுள் காப்பீட்டுத் திட்டமாகும். இது உங்கள் குடும்பத்தின் நிதி எதிர்காலத்தை பெயரளவு செலவில் பாதுகாக்கிறது. எந்தவொரு காப்பீட்டுத் திட்டத்துடன் ஒப்பிடும் போது டேர்ம் திட்டத்திற்கு செலுத்தப்படும் பிரீமியங்கள் மிகக் குறைவு என்பதை தெரிந்து கொள்ளுங்கள். ஒரு டேர்ம் இன்சூரன்ஸ் திட்டத்தின் மூலம், பெயரளவிலான பிரீமியத்திற்குப் பதிலாக அதிக இறப்பு நன்மை அல்லது ஆயுள் காப்பீட்டைப் பெறலாம். டேர்ம் திட்டத்தின் பிரீமியம் மற்ற காப்பீட்டு திட்டங்களை விட குறைவாக உள்ளது. இது உயிர் பாதுகாப்புத் திட்டத்தை மட்டுமே வழங்குகிறது மற்றும் துணைப் பலன்களோ முதலீட்டு உறுப்புகளோ இணைக்கப்படவில்லை.
டேர்ம் திட்டத்திற்கு நீங்கள் செலுத்தும் பிரீமியம் உங்கள் வயது மற்றும் பாலிசி காலத்தைப் பொறுத்தது. உங்கள் வயதிலேயே டேர்ம் பிளானை வாங்கினால், பிரீமியம் ஒப்பீட்டளவில் குறைவாக இருக்கும். நீங்கள் 10 ஆண்டுகள் வரை குறைந்த காலவரையறை திட்டத்தை எடுக்கலாம் . நீங்கள் வீடு அல்லது தனிநபர் கடன் போன்றவற்றைப் பெற்றிருந்தால் குறுகிய காலத் திட்டங்களைப் பெறலாம். வீட்டுக் கடன் காலம் 10 ஆண்டுகளாக இருந்தால், உங்கள் வீட்டுக் கடன் தொகைக்கு சமமான தொகைக்கு 10 ஆண்டுகளுக்கு டேர்ம் பிளானை எடுக்கலாம். கடன் காலத்தில் உங்களுக்கு ஏதேனும் நேர்ந்தால், மீதமுள்ள கடன் தொகையைத் திருப்பிச் செலுத்துவதன் மூலம் உங்கள் குடும்பத்தினர் வீட்டைத் தக்க வைத்துக் கொள்ள முடியும்.
முன் வரையறுக்கப்பட்ட சதவீத அதிகரிப்புடன் நிர்ணயிக்கப்பட்ட இடைவெளியில் ஆயுள் காப்பீட்டை அதிகரிக்கும் டேர்ம் பிளான்கள் உள்ளன. இது பாலிசிதாரருக்கு அவரது உயரும் வருமான நிலைகளுடன் இணைந்து ஆயுள் காப்பீட்டை அதிகரிக்க உதவுகிறது.