கும்பகோணம்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் திராவிட கழகம் மாணவர் பிரிவு சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
பாபநாசம் மாணவ பொறுப்பாளர் கார்த்திகேயன் வரவேற்றார். மாவட்ட மாணவரணி தலைவர் வினோத் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் பாரா மெடிக்கல் படிப்பிலும் நீட் தேர்வை திணிப்பதாக கூறியும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் நிம்மதி, திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர்கள் விஜயகுமார், தமிழ்மணி, மாவட்ட மகளிர் அணி தலைவர் திரிபுரசுந்தரி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாநகர செயலாளர் காமராஜ் நன்றி கூறினார்