சென்னை: 2026 தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கட்சியை வலுப்படுத்தும் பணியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஈடுபட்டுள்ளார். இன்று தமிழகம் வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை டிடிவி தினகரன் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுக இணைப்பு குறித்த பேச்சு வலுத்து வரும் நிலையில், அமித்ஷாவை டிடிவி தினகரன் சந்திப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் டிடிவி தினகரன் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் டிடிவி தினகரன் வழக்கமான உடல் பரிசோதனைக்காக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. சோதனைகள் முடிந்து டிடிவி தினகரன் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.