சென்னை: தமிழக கடலோர பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக இந்திய புவியியல் ஆய்வு மைய இயக்குனர் விஜயகுமார் தெரிவித்துள்ளார். இந்திய புவியியல் ஆய்வு மையத்தின் 175-வது நிறுவன தின விழா, சென்னை கிண்டியில் உள்ள மண்டல அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில், சர்வே இயக்குநர் விஜயகுமார், முன்னாள் இயக்குநர் ஏ.சுந்தரமூர்த்தி உள்ளிட்ட பல்வேறு அலுவலர்கள், துறை வல்லுநர்கள் கலந்து கொண்டு கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.
175-வது ஆண்டை முன்னிட்டு மையம் சார்பில் சிறப்பு கண்காணிப்பும் செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில், ஆய்வு மைய இயக்குனர் விஜயகுமார் பேசியதாவது:- மழை போல் நில நடுக்கம் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. சமீபகாலமாக நிலநடுக்கங்களின் பதிவுகளும் அதிகரித்துள்ளன. சென்னை கருங்கலின் ஒரு பகுதி. எனவே, சென்னையில் நிலநடுக்கம் குறித்து அச்சப்படத் தேவையில்லை.
ஆனால் கடலோரப் பகுதிகளில் மக்கள் கவனமாக இருக்க வேண்டும். அங்கே உயரமான இடங்களில் ஏறாமல் இருப்பது நல்லது. மற்ற பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.