சென்னை: அ.தி.மு.க., பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்ட அறிக்கை:- தமிழகத்தில் உள்ள நெசவாளர்கள் பலர், தாங்கள் வசிக்கும் வீடுகளில், ஓரிரு தறி அமைத்து, குடிசைத்தொழில் நடத்தி, தறி நடத்தி வருகின்றனர். வணிக அடிப்படையில் அந்த பகுதிகளுக்கு வணிக வரி விதிக்க வேண்டும். குறிப்பாக, சேலம் மாநகராட்சி பகுதிகளில் இதுபோன்ற குடிசைத்தொழிலில் ஈடுபடும் நெசவாளர்களின் வீடுகளில் உள்ள விசைத்தறிகளை மாநகராட்சி ஊழியர்கள் அளந்து, சதுர அடிக்கு ரூ.27 வணிக வரி விதிக்க உள்ளதாக வெளியான செய்தி நெசவாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு அ.தி.மு.க கண்டனம் தெரிவிக்கிறது. எனவே தமிழகம் முழுவதும் இதுபோன்ற தறிகள் உள்ள பகுதிகளை கணக்கிடும் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும். நூல் மீதான வரியை முற்றிலுமாக நீக்கவும், கைத்தறி மற்றும் விசைத்தறியில் தயாரிக்கப்படும் ஜவுளிகளுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கவும், தமிழகத்தில் ஜவுளித் தொழிலை மீட்டெடுக்கவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் விரைந்து எடுக்க வேண்டும் என்றார்.