தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஹரிதா மஹாலில் நாளை பிளஸ் 2 முடித்த மாணவ மாணவிகள் அடுத்து என்ன படிக்கலாம் என்பது குறித்த கல்வி வழிகாட்டி கண்காட்சி நடக்கிறது.
தர்மபுரி விஜய் இன்போ மீடியா, சென்னை பிரின்ஸ் கல்வி நிறுவனங்கள், புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள் மற்றும் பல்வேறு கல்வி நிறுவனங்கள் இணைந்து இந்த கல்வி வழிகாட்டி கண்காட்சியை நடத்துகின்றன.
நாளை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை கண்காட்சி நடைபெற உள்ளது. இந்த கண்காட்சியில் மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர் இலவசமாக கலந்து கொள்ளலாம்.
இந்த கண்காட்சியில் பிளஸ் டூ முடித்த மாணவ மாணவிகள் அடுத்து என்ன கல்வி பயிலலாம் என்பது குறித்து பல்வேறு கல்வி நிறுவனங்கள் சார்ந்தவர்கள் பங்கேற்று விளக்கம் அளிக்க உள்ளனர்.
மேல்நிலைக் கல்வி முடிந்து உயர்கல்வியை எங்கு படிக்கலாம். எந்த பிரிவில் எடுத்து படிக்கலாம் என்பது குறித்து ஆலோசனைகளும் வழங்கப்பட உள்ளன. இதனை கும்பகோணம் பகுதியை சார்ந்த மாணவ, மாணவிகள் பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது.