தஞ்சாவூா்: நீதிமன்றம் உத்தரவுப்படி போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படியை அரசு உடனே வழங்க வேண்டும். பண பலன்கள் வழங்க வேண்டும் என்று தஞ்சையில் அரசியல் சாராத போக்குவரத்து ஓய்வூதியர்கள் நலச்சங்க நிர்வாக (பொது ) குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் சென்னை ஜெயராமன் வரவேற்புரையாற்றினார். மாநிலத் தலைவர் ராஜா தலைமை வகித்து பேசுகையில், நம் சங்க உறுப்பினர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். அரசியல் சார்ந்து இருக்காமல் தனிப்பட்ட அமைப்பாக செயல்பட்டு நம் உறுப்பினர்களின் கோரிக்கைகளை அரசுக்கு வலியுறுத்த வேண்டும் என்றார். செயலாளர் சேகர், பொருளாளர் ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில் நீதிமன்றம் உத்தரவுப்படி போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படியை அரசு உடனே வழங்க வேண்டும். பண பலன்கள் வழங்க வேண்டும். 15-வது ஊதிய ஒப்பந்தம் பேசி முடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தொடர்ந்து நடந்த கூட்டத்தில் மாவட்டத்திற்கு ஒருவர் என நிர்வாக குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் நிர்வாகிகள் சென்னை அய்யனாரப்பன், முசிறி கந்தசாமி, மதுரை கணபதி சுந்தரம், சேலம் மாரப்பன், வேலூர் தட்சிணாமூர்த்தி, காஞ்சிபுரம் முரளி, சம்பந்தம், நாகை மனோகரன், திருவாரூர் ராமலிங்கம், கும்பகோணம் ஞானசேகர், சாமிநாதன், மயிலாடுதுறை அமுதன், நாகர்கோவில் நாகராஜன், திருநெல்வேலி முத்து, கரூர் கந்தசாமி, புதுக்கோட்டை சேவியர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தஞ்சை சீனிவாசன் நன்றி கூறினார்.