தேனி: தேனி பேருந்து நிலைய கடைகளுக்கு ஆட்சியர் அபராதம் விதித்துள்ளார். எதற்காக தெரியுங்களா?
தேனி பேருந்து நிலையத்தில் காலாவதியான உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக ஆட்சியருக்கு வந்த தகவல்களின் அடிப்படையில் இன்று ஆட்சியர் மற்றும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பேருந்து நிலையம் அருகே கடைகளில் சோதனை நடத்தினர்.
சோதனையில் 200 கிலோவுக்கும் மேல் காலாவதியான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 2.5 கிலோ கெட்டுப்போன இறைச்சி கண்டுபிடிக்கப்பட்டு, 6 கடைகளுக்கு ரூ. 18 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.