சென்னை: பண்டிகை முன்பணம் அதிகரிப்பு குறித்தும் அவர் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அந்த அறிவிப்பில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் குடும்பங்களுடன் பண்டிகைகளை சிறப்பாக கொண்டாடும் வகையில் இதுவரை வழங்கப்பட்ட ரூ.10,000 பண்டிகை முன்பணம் இப்போது ரூ.20,000 ஆக அதிகரிக்கப்படும் என்று அவர் கூறியிருந்தார்.

இந்த அறிவிப்பை செயல்படுத்த நிதித்துறை செயலாளர் உதயச்சந்திரன் நேற்று அரசு உத்தரவை பிறப்பித்தார். அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:- பண்டிகை காலத்திற்கான முன்பணம் பெற தகுதியுள்ள ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் கல்வி நிறுவனங்கள், அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் உட்பட அனைவருக்கும் இந்த உத்தரவு பொருந்தும்.
அதன்படி, அவர்கள் பண்டிகை காலத்திற்கான முன்பணமாக ரூ.20 ஆயிரம் பெறலாம். அந்தப் பணத்தைக் கழிக்கும் முறையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.