கொடைக்கானல்: கொடைக்கானல் மலைப்பகுதியில் பிளாஸ்டிக் பாட்டில்களை முழுமையாக தடை செய்ய வேண்டும் என தமிழக அரசு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உத்தரவிட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு முழுமையாக அமல்படுத்தப்படவில்லை.
இந்த உத்தரவின்படி, கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களிடம் பிளாஸ்டிக் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ஒரு பாட்டிலுக்கு ரூ.20 வசூலிக்கப்படும். தற்போது இந்த நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
கொடைக்கானல் நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் இன்று கொடைக்கானலில் முதற்கட்ட ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். தற்போது கொடைக்கானலில் உள்ள தனியார் விடுதிகளிலும், கொடைக்கானலுக்குச் செல்லும் கேரள பேருந்துகளிலும் பிளாஸ்டிக் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 1000-க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களை பறிமுதல் செய்து அபராதம் செலுத்த வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன் அடிப்படையில் பாட்டிலை பறிமுதல் செய்தால் ஒரு பாட்டிலுக்கு ரூ.20 வீதம் அபராதம் விதிக்கப்படும் என கடுமையாக கூறினர். மேலும் கொடைக்கானல் மலைப்பகுதியில் இருக்கக்கூடிய தனியார் ஓட்டல்கள் மற்றும் பேருந்துகளில் தொடர்ந்து சோதனை நடத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.