நாமக்கல்: நாமக்கல்லில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு பைக்கில் ஹெல்மெட் அணியாமல் வந்த அதிகாரிகள், பொதுமக்கள் என 106 பேரிடமிருந்து அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் ஆட்சியர் உமாவின் உத்தரவின் பேரில், அலுவலக வளாகத்திற்குள் வாகனங்களில் ஹெல்மெட் அணியாமலும், சீட் பெல்ட் அணியாமலும் வரும் வாகன ஓட்டிகளுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.
அரசு அதிகாரிகள், மக்கள் என 106 பேருக்கு தலா ஆயிரம் ரூபாய் வீதம் அபராதம் விதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர். மாவட்ட ஆட்சியரின் இந்த அதிரடி நடவடிக்கையால் இனி கலெக்டர் அலுவலகத்திற்கு இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் நிச்சயம் ஹெல்மெட் அணிந்துதான் வருவார்கள்.