கோவை: கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்த, சி.எம்.ஆர்.எல்., நிறுவனம் ரூ.154 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. கோவையில் விரைவில் அலுவலகம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்துவதற்கான சர்வே துவங்கி விட்டதாகவும், அதன்பின் வருவாய்த்துறை மூலம் கையகப்படுத்தும் பணி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
34.8 கிமீ நீளம் கொண்ட மெட்ரோ ரயில் திட்டத்தின் மூலதனச் செலவு ரூ.10,740 கோடி ஆகும். டிஆர்ஓ திட்டத்துக்கான நடைமுறைகளை விரைவாக முடித்து செயல்படுத்தி, நிலம் கையகப்படுத்துவதற்கான திட்டத்தை தயாரித்து, சாலைகள் மற்றும் மேம்பாலங்களுடன் ஒருங்கிணைத்து, பொதுமக்களின் சிரமத்தை குறைக்கும் பணி துவங்கியுள்ளது. கோவையில் மெட்ரோ ரயில் நிறுவன அலுவலகம் அமைக்க மாநகராட்சி இடம் ஒதுக்கப் போகிறது.