ராமேஸ்வரம்: தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் ஏப்ரல் 15-ம் தேதி தொடங்கியது. தமிழகத்தில் ஜூன் 14-ம் தேதி வரை 61 நாட்களுக்கு தடை அமலில் உள்ளது. இதனால் தமிழகத்தில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மோட்டார் படகுகள் கடலுக்கு செல்லாமல் கடலோர பகுதிகளில் நங்கூரமிட்டுள்ளன. மீனவர்களும் தங்களது மோட்டார் படகுகளை சரி செய்யும் பணியை தொடங்க உள்ளனர்.
மோட்டார் பொருத்தப்பட்ட நாட்டுப்படகு மீனவர்கள் வழக்கம் போல் சிறிய படகுகளை பயன்படுத்தி மீன்பிடித்து வருகின்றனர். ஆனால் இவற்றால் பிடிக்கப்படும் மீன்கள் போதுமானதாக இல்லாததால் தமிழகத்தின் முக்கிய மீன் சந்தைகளில் மீன்களின் விலை உயரத் தொடங்கியுள்ளது. இதுகுறித்து ராமேஸ்வரம் நாட்டுப்படகு மீனவர்கள் கூறியதாவது:-

ராமநாதபுரம் மாவட்டத்தில் மோட்டார் பொருத்தப்பட்ட நாட்டுப்படகு மீனவர்கள், கரைவலை மீனவர்கள், பாய்மர படகுகள், படகுகளில் மீனவர்கள் மீன் பிடித்து வருகின்றனர். இந்த மீன்களை வாங்கி மற்ற மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு அனுப்ப கடலோர பகுதி வியாபாரிகள் போட்டி போடுகின்றனர். தற்போது ஷீலா மீன் ஒன்றின் விலை ரூ. 800 என்பது ரூ. 900, மீன் ஒன்றின் விலை ரூ. 300 என்பது ரூ. 400-க்கும், உளி, பாரை மீன் ஒன்றின் விலை ரூ. 400 என்பது ரூ. 500-க்கும், நாகரை மீன் ஒன்றின் விலை ரூ. 250 என்பது ரூ. 350-க்கும், சூடை மீன் ஒன்றின் விலை ரூ. 100 என்பது ரூ. 150, கணவாய் மீன் விலை ரூ. 400 என்பது ரூ. 500 ஆகவும், நண்டு ஒன்றின் விலை ரூ. 500 என்பது ரூ. 600. மீன் விலை உயரும் என்றும் தெரிவித்தனர்.