திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாடிய 6 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
சத்திரப்பட்டி வனப்பகுதிக்குட்பட்ட ராமபட்டினம்புதூர் பகுதியில் ஒட்டன்சத்திரம் வனசரக பணியாளர்கள் ரோந்து பணி சென்றபோது, கம்பி வேலியில் மின்சாரம் பாய்ச்சி காட்டுப் பன்றியை வேட்டையாடியது தெரியவந்தது.
மேலும் இறைச்சியை பங்கு பிரித்துக் கொண்டிருந்த சொக்கன், முருகேசன், பழனிச்சாமி, துரைசாமி, ராமசாமி மற்றும் தோட்டத்து உரிமையாளர் மனோகரன் ஆகியோர் பிடிபட்டனர்.
அவர்களுக்கு தலா 40 ஆயிரம் ரூபாய் வீதம் 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.