திருத்தணி: பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ. வேலு திருத்தணி ரயில் நிலையத்தில் இருந்து கோவிலுக்கு இலவச பேருந்து சேவையை இன்று தொடங்கி வைத்தார். திருத்தணி முருகன் கோவிலுக்கு 5-வது படைவீடான திருத்தணி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் கோரிக்கையை ஏற்று, திருத்தணி ரயில் நிலையத்தில் இருந்து பக்தர்கள் மலைக்கோயிலுக்கு சென்று வர வசதியாக தமிழக அரசு சார்பில் இலவச பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.
மாநில பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ. வேலு பேருந்து சேவையை இன்று தொடங்கி வைத்தார். மேலும், திருத்தணிக்கு வருவதற்கு பயன்படுத்தப்படும் மாற்று சாலையையும் அமைச்சர் வேலு இன்று ஆய்வு செய்தார். இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் நாசர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.