தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் இதயா மகளிர் கல்லூரியில் மாணவிகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் இதயா மகளிர் கல்லூரியில் 12ம் வகுப்பு தேர்வு முடித்த மாணவிகள் விடுமுறையை பயனுள்ளதாக மாற்றும் வகையில் ஒரு மாத காலத்திற்கு இலவச கோடைகால ஸ்போக்கன் இங்கிலீஷ் மற்றும் கணினி வகுப்புகள் தொடங்கியது.
இதற்கென பேருந்து நிலையத்திலிருந்து கல்லூரிக்கு, கல்லூரி பேருந்து இயக்கப்படுகிறது. மாணவிகள் இந்த பயிற்சி வகுப்பில் பங்கேற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த பயிற்சி வகுப்புகள் மாணவிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். மேல்நிலை கல்வியை முடித்த மாணவிகள் கல்லூரிக்கு செல்லும் பொழுது ஆங்கிலத்தில் தடுமாற்றம் இன்றி பேச எளிமையான ஸ்போக்கன் இங்கிலீஷ் பயிற்சியும் அளிக்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனை பயன்படுத்திக் கொண்டு மாணவிகள் தங்கள் வாழ்வில் முன்னேற்றத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம்.