ஊட்டி: ஊட்டி கர்நாடகா பூங்காவில் வைக்கப்பட்டுள்ள ஜெரேனியம் மலர் அலங்காரத்தை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். ஊட்டிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கோடை விடுமுறையில் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இந்நிலையில், கோடை சீசன் துவங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தற்போது பூங்காக்கள் அனைத்தையும் தயார்படுத்தும் பணியில் தோட்டக்கலைத்துறையினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
அதே நேரத்தில், கர்நாடக மாநில தோட்டக்கலை துறையால் அமைக்கப்பட்டுள்ள பூங்காவும் தயாராகி வருகிறது. இந்த பூங்காவில் ஜெரேனியம், பால்சம், டெய்சி உள்ளிட்ட பல்வேறு வகையான மலர் செடிகள் தொட்டிகளில் வைக்கப்பட்டு, அவற்றில் தற்போது பூக்கள் பூத்து குலுங்குகின்றன.

இந்த பானைகள் பசுமை இல்லங்கள், கூரைகள் மற்றும் தரையில் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இந்த மலர் அலங்காரங்களை கண்டு ரசிப்பதுடன், அருகில் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர்.