சென்னை: கடலோர பகுதிகளில் நிலவும் குறைந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இரண்டு நாட்களுக்கு மழையோ அல்லது கனமழையோ பெய்ய வாய்ப்புள்ளது.
மழைக்காலங்களில் பெய்யும் மழையால், மழைநீர் வடிகால் இல்லாமல் பல இடங்களில் குளம் போல் தேங்கி, வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுவதும், மழைநீரில் கலந்து சாக்கடை குடிநீரில் கலப்பதும், சாலைகள் பழுதடைவதும், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதும் வழக்கம். சீர்குலைந்து, மக்களின் இயல்பு வாழ்க்கை சிரமத்திற்கு உள்ளாகியுள்ளது.
ஆனால், தமிழக அரசு இதையெல்லாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாத வகையில் பருவமழைப் பணிகளைத் தொடங்க வேண்டும். கடந்த காலங்களில் மழை, கனமழை, மிகக் கனமழை, புயல், வெள்ளம் என மக்கள் பல இன்னல்களையும், துன்பங்களையும் அனுபவித்தனர். குறிப்பாக மழை, புயல், வெள்ளம் போன்றவற்றால் விவசாய நிலங்கள் சேதமடைந்து பயிர்கள் நாசமாகி விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்தனர்.
மேலும் பருவமழையால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பருவமழையின் பாதிப்புகளை அறிந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தால், பெரிய பாதிப்புகளில் இருந்து காத்துக் கொள்ளலாம். பொதுமக்களும் பாதுகாப்பின் அவசியத்தை உணர வேண்டும். பாதுகாப்புக்காக, காவல்துறை, மின்சாரம், சுகாதாரம், உள்ளாட்சி போன்ற முக்கிய துறைகளில் பணிபுரிபவர்களின் தேவைகளை நிறைவேற்றி அவர்களின் பாதுகாப்பான பணிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
எனவே, பருவமழைக் காலத்தில் சென்னை உள்ளிட்ட மாநிலத்தில் எங்கு மழை பெய்தாலும் மக்கள், விவசாயம், கால்நடைகளைக் காக்க தொடர் கண்காணிப்புப் பணிகளில் தமிழக அரசு கவனம் செலுத்தி மக்களுக்குத் துணை நிற்க வேண்டுமென தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.