சென்னை : கோடை விடுமுறைக்கு வெளியூர் செல்வோருக்கு தமிழகப் போக்குவரத்துக் கழகம் சிறப்பு சலுகை அறிவித்துள்ளது.
கோடை கால விடுமுறைக்கு வெளியூர்களுக்கு பயணம் செய்யும் பயணிகளுக்கு TNSTC சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது.
ஆன்லைன் முன்பதிவு திட்டத்தின் வழியாக முன்பதிவு செய்யும் பயணிகளை ஊக்குவிக்கும் வகையில், பயணச்சீட்டு முன்பதிவு செய்து, 01/04/2025 -15/06/2025 2 பயணம் மேற்கொள்ளும் பயணிகளில், 75 பயணிகளை கணினி சிறப்பு குலுக்கல் முறையில் தேர்வு செய்து சிறப்பு பரிசுகள் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.