சென்னை: தமிழக அரசு கடந்த 48 மணி நேரத்தில் மகளிர் உரிமை தொகை மற்றும் கல்விக்கடன் தள்ளுபடி தொடர்பாக இரண்டு முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. முதலில், ஆதிதிராவிடர் மாணாக்கர்களின் கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் நீண்ட காலமாக கல்விக் கடன் தள்ளுபடி தேவை என்ற கோரிக்கை பலரிடமிருந்தும் எழுந்து வந்தது. அதேபோல், மாணவர்கள் கடந்த சில வாரங்களாக கல்விக் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்கள்.
தமிழக அரசின் புதிய அறிவிப்பின் படி, 1972-2009 வரை தந்த கடன்களின் ரூ.48.95 கோடி நிலுவை தொகை அடையாளம் காண முடியாத காரணங்களால் தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம், தமிழகத்தில் உள்ள ஆதிதிராவிடர், பழங்குடியினர், கிறிஸ்தவ ஆதிதிராவிடர் மாணவர்கள் இனி கடனில் இருந்து மீளலாம்.
இதேபோல், மகளிர் உரிமை தொகை தொடர்பாக இரண்டு முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், 3 மாதங்களில் தமிழ்நாட்டில் அனைத்து தகுதி உள்ள மகளிருக்கும் ₹1,000 உரிமைத்தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இந்த திட்டத்திற்கு புதிய ரேஷன் கார்டு பெற்ற மகளிருக்கும் வாய்ப்பு வழங்கப்படுவதாகவும், ஏற்கனவே பல்வேறு கோரிக்கைகள் கேட்டுக்கொள்ளப்பட்டன.