தமிழகத்தில் மாநில நெடுஞ்சாலைகள் ஆணையம் அமைக்க துவக்கப்பட்ட சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார். இந்த மசோதா, பிப்ரவரி 2024-இல் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு, பின் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது.
இதன்படி, புதிய ஆணையம் நெடுஞ்சாலைகள் பராமரிப்பு, தரம் உயர்த்துதல், நீண்டகால திட்டங்கள் உருவாக்குதல் மற்றும் பன்னாட்டு நிதி கொண்டுவருதல் போன்ற முக்கிய பணிகளுக்காக செயல்படும். ஆணையத்தில் ஒரு தலைவர், மூன்று முழுநேர மற்றும் மூன்று பகுதி நேர உறுப்பினர்கள் நியமிக்கப்படுவர்.
இந்த ஆணையம் விரைவில் செயல்பாடுகளுக்கு ஆரம்பம் கொடுத்திடும்.