சமீபத்தில் சென்னை கிண்டி மருத்துவமனையில் டாக்டர் பாலாஜி தாக்கப்பட்டதற்கு கவர்னர் ரவி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதல் அதிர்ச்சி அளிப்பதாகவும், வன்மையாக கண்டிக்கத்தக்கதாகவும் ஆளுநர் ரவி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
“மருத்துவர்களுக்கு எதிரான எந்தவொரு வன்முறையும் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று கூறிய ஆளுநர், மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அவசர நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மேலும் டாக்டர் பாலாஜி விரைவில் குணமடைய வாழ்த்தினார்.
இந்த சம்பவம் மருத்துவ உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஆளுநர் ரவியின் அறிக்கை இந்த விஷயத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளது.