பொதுத்துறை வங்கிகளில் எழுத்தர் (Clerk) பணிக்கான அறிவிப்பு வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (ஐபிபிஎஸ்) வெளியிட்டது. வெளியிடப்பட்டுள்ளது. அதற்கு விண்ணப்பிக்கும் தேதி பணியிடங்கள் குறித்த விவரங்கள் விண்ணப்பிக்கும் இணையதளம் பற்றிய தகவல்கள் அடங்கிய முழு விவரத்ததை இந்த பதிவில் பார்க்கலாம்.
இந்தியாவில் இப்போது 12 பொதுத்துறை வங்கிகள் உள்ளன. அந்த வகையில் பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள 665 எழுத்தர் (clerk) பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.. ஏதேனும் துறையில் பட்டம் பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இந்த கல்வித் தகுதி உள்ளவர்கள் ஜூலை 21ம் தேதிக்குள் www.ibps.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு:
இதற்கான வயது வரம்பு 20 வயது முதல் 28 வயதுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும். அதாவது 1996ஆம் ஆண்டு ஜூலை 2 ஆம் தேதிக்கு பிறகு பிறந்தவர்களும், 2004 ஜூலை 1ஆம் தேதிக்கு முன் பிறந்தவர்கள் வரை மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடைசி நாள்:
இந்த பணிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 21.07.2024 ஆகும். விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தை https://ibpsonline.ibps.in/crpcl14jun24/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.