ஈரோடு: ஈரோடு மாவட்டம் கோபியில் இந்து முன்னணி சார்பாக நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் பங்கேற்ற எச்.ராஜா, பின்னர் பங்கேற்பாளர்களிடம் கூறியதாவது:- அமெரிக்கா இந்தியா மீது 50 சதவீத வரி விதித்துள்ளது. இதன் காரணமாக, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட ‘காட்’ ஒப்பந்தம் தோல்வியடைந்தது.
நாட்டு மக்கள் உள்நாட்டு பொருட்களை வாங்க வேண்டும். அமெரிக்க பொருட்களை ஆன்லைனில் வாங்க மாட்டோம் என்று அனைவரும் முடிவு செய்ய வேண்டும். அமெரிக்காவின் பொருளாதார நடவடிக்கைக்கு மற்றொரு பொருளாதார நடவடிக்கை மூலம் மட்டுமே பதிலளிக்க முடியும்.

மற்ற நாடுகளுடன் வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்துவதன் மூலம், அமெரிக்க வரி முறையால் ஏற்படும் இழப்பை சரிசெய்ய முடியும். ஜிஎஸ்டி வரி முறையை சீர்திருத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
சிறுபான்மையினரின் வாக்குகள் மட்டுமே போதுமானது என்று தவெக தலைவர் விஜய் முடிவு செய்துள்ளார் என்பது அவரது உரையிலிருந்து தெரிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.