சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் மழை பெய்தது. இதனால் சாலையில் மழைநீர் தேங்கி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
அதன்படி சென்னையில் நேற்று இரவு முதல் இடி, மின்னலுடன் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கே.கே.நகர், வடபழனி, கோடம்பாக்கம், ஈக்காட்டுத்தாங்கல், அமைந்தகரை, கிண்டி, அண்ணாசாலை, மயிலாப்பூர், வில்லிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மழை பெய்தது. திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, காசிமேடு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் பலத்த மழை பெய்தது.
இதேபோல், புறநகர் பகுதிகளான குரோம்பேட்டை, பல்லாவரம், மேடவாக்கம், ஆவடி, பூந்தமல்லி, கும்மிடிப்பூண்டி பழைய மாமல்லபுரம் சாலை, சோழிங்கநல்லூர் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்தது. மழை காரணமாக சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டது. சென்னையில் நேற்று இரவு முதல் மழை பெய்து வருகிறது ஐசிஎப் வடக்கு திருமலா நகர் பகுதியில் மழைநீர் வடிகால்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது பெரிய மோட்டார் பொருத்தப்பட்ட பம்புகள் மூலம் அருகில் உள்ள சாலை வழியாக ஏரியில் விடப்படுகிறது.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் காலை முதல் இடைவிடாது மழை பெய்ததால் சாலை ஓரங்களில் மழை நீர் தேங்கியது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். போரூர், சோழிங்கநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் காலையிலேயே வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன. மழை காரணமாக சென்னையில் உள்ள 21 சுரங்கப் பாதைகளும் தண்ணீரில் மூழ்கியுள்ளன.
அதேநேரம், நந்தனம், அம்பத்தூர், அண்ணாசாலை உள்ளிட்ட பகுதிகளில் குண்டும், குழியுமான சாலைகளில் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணித்தனர்.இந்நிலையில், மழை காரணமாக விமானங்கள் வந்து செல்வதில் சுமார் அரை மணி நேரம் தாமதம் ஏற்பட்டது. சென்னையில் இருந்து மும்பை மற்றும் டெல்லி செல்லும் விமானங்கள் 40 நிமிடங்கள் வரை தாமதமாக வந்தன. சென்னையில் அதிகபட்சமாக பெருங்குடியில் 8 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
ஆலந்தூர், மீனம்பாக்கம், அடையாறு, சென்னை விமான நிலையம், நந்தனம் ஆகிய இடங்களில் தலா 6 செ.மீ., கிண்டி, உத்தண்டி, தரமணி, சோழிங்கநல்லூர், கோடம்பாக்கம் ஆகிய இடங்களில் தலா 5 செ.மீ., பதிவானது.