சென்னை: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:-
தமிழகத்தின் உள்மாவட்டங்களில் நிலவும் குறைந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று (செப்டம்பர் 28) முதல் சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.
அக்டோபர் 1, அக்டோபர் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். இன்று (செப். 28) கோவை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி ஆகிய மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்தது.
இதேபோல் கோவை மாவட்டம், நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மலையோர பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும். செப்., 27-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையின்படி, அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டில் 9 செ.மீ., மற்ற இடங்களில் 5 செ.மீ., கடவனூர், வெங்கூர், திண்டுக்கல் மாவட்டம், 4 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரியலூர். மணலூர்பேட்டை, திருக்கோவிலுார், கோவை சின்கோனாவில் 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இன்று முதல் 30-ம் தேதி வரை மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அதை ஒட்டியுள்ள குமரி கடல் பகுதிகளில் மணிக்கு 55 கி.மீ. சூறாவளி காற்று வீசக்கூடும்.
எனவே, இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.