சென்னை: சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வானிலை முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளதாவது:- குமரி கடல் மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருகிறது.

அக்டோபர் 18 அன்று அரபிக் கடல் மற்றும் லட்சத்தீவு தீவுகளில் கேரள-கர்நாடக கடற்கரையில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது.
இதன் காரணமாக, இன்று, 20, 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டின் பெரும்பாலான இடங்களிலும், 19 மற்றும் 21 ஆகிய தேதிகளில் சில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.