சென்னை: தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியுள்ளது. இது இன்று வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக் கடலிலும், நாளை வடக்கு நோக்கியும் நிலைபெற்று மத்திய மேற்கு வங்கக் கடலில் நிலைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், தென்கிழக்கு வங்கக் கடலில் இருந்து தென்மேற்கு வங்கக் கடல் வழியாக தென் தமிழகம் வரை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன்படி, இன்று புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.