சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட வானிலை அறிக்கை:- தென்னிந்தியாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்களில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஏப்., 2, 3, 4-ல் ஒரு சில இடங்களிலும், ஏப்., 5-ல் ஓரிரு இடங்களிலும், இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 2-ம் தேதி, கோவை மாவட்டத்தில், தென்காசி, விருதுநகர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், கோவை மாவட்டத்தில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.