சென்னை: தமிழகத்தில் கோவை, தென்காசி, விருதுநகர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஏப்ரல் 2-ம் தேதியும், கோவை, நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் ஏப்ரல் 3-ம் தேதியும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:-
தென்னிந்தியாவில் வளிமண்டலத்தின் தாழ்வான பகுதிகளில் கிழக்கு மற்றும் மேற்கு காற்று சந்திக்கும் பகுதி நிலவி வருகிறது. தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் மார்ச் 30-ம் தேதி வறண்ட வானிலையே நிலவும். தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மார்ச் 31 மற்றும் ஏப்ரல் 1-ம் தேதிகளிலும் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏப்ரல் 2-ம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.

கோவை மாவட்டம், தென்காசி, விருதுநகர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏப்., 3ல், தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.கோவை மாவட்டம், நீலகிரி, ஈரோடு மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏப்ரல் 5-ம் தேதி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.