சென்னை: தேனி, சேலம் உட்பட தமிழ்நாட்டின் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பு:-
தென்மேற்கு கடற்கரையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய கடற்கரையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று தமிழ்நாட்டின் ஒரு சில இடங்களிலும், 6 மற்றும் 7-ம் தேதிகளில் பெரும்பாலான இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழ்நாட்டில் இன்று நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஒன்று அல்லது இரண்டு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது. தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஒன்று அல்லது இரண்டு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது.
திண்டுக்கல், திருப்பூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு மற்றும் சேலம் மாவட்டங்களில் ஒன்று அல்லது இரண்டு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.