தஞ்சாவூர்: தஞ்சையை அடுத்துள்ள வல்லம் மற்றும் சுற்றுவட்டார் பகுதிகளில் நேற்று காலை முதல் வெப்பம் அதிகமாக காணப்பட்டது.
இந்நிலையில் நேற்று இரவு வல்லம் பகுதியில் கன மழை பெய்தது. இதனால் சாலையில் மழைநீர் வெள்ளம் போல் ஓடியது. தற்போது பெய்துள்ள மழை
விவசாய பணிகளுக்கு உபயோகமாக இருக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர் .
சுமார் அரை மணி நேரம் கனமழை நீடித்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.