தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று மதியம் சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. இதனால் குளிர் காற்று வீசியது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது. புதிய பேருந்து நிலையத்தில் தண்ணீர் தேங்கி நின்றதால் மக்கள் அவதியடைந்தனர்.
வங்க கடலில் உருவாகியுள்ள வளிமண்டல கீழடூக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. தஞ்சை மாநகரில் காலை முதல் மதியம் வரை வெயில் சுட்டெரித்தது. சிறிது நிறத்திற்கு பிறகு வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
இதையடுத்து மதியம் 1 மணி முதல் மூன்று மணி வரை மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மழையின் காரணமாக தஞ்சை மாநகரில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. ஆயுத பூஜைக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக வெளியே வந்த பொதுமக்கள் நீண்ட நேரம் மழையில் சிக்கிக்கொண்டனர்.
பூசணிக்காய் வாழைப்பழம் தேங்காய் உள்ளிட்ட பொருள்களின் விற்பனைகள் முடங்கியது.