சென்னை : ரேஷன் கடைகள் இன்று இயங்காது. பொங்கல் தொகுப்பு வழங்குவதற்காக விடுமுறை தினத்தில் ரேஷன் கடைகள் திறக்கப்பட்டதால் அதற்கு பதிலாக இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் இன்று (பிப்.22) விடுமுறையாகும். பொங்கல் தொகுப்பு வழங்குவதற்காக கடந்த மாதம் 10ஆம் தேதி விடுமுறை நாளில் பணி செய்ததற்காக, ரேஷன் கடை ஊழியர்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், பொதுமக்கள் யாரும் இன்று ரேஷன் கடைகளுக்கு பொருட்கள் வாங்கச் சென்று ஏமாற வேண்டாம்.