சென்னை: நாம் வசிக்கும் வீடுகள்எப்படி இருக்க வேண்டும். எந்த பொருட்களை எந்த திசையில் வைக்க வேண்டும் என்பதை தெரிந்து செய்வோம்.
1.வீட்டின் முகப்பு கதவு கிழக்கோ அல்லது வடக்கோ நோக்கி இருந்தால் அது வீட்டிற்கு நன்மையாக இருக்கும்.
- வீட்டின் கழிவு தொட்டி வட-கிழக்கு அல்லது கிழக்கில் இருக்குமாறு பார்த்து கொள்ளணும்.
- வீட்டின் பூஜையறை வடகிழக்கு அறையிலோ அல்லது வடகிழக்கு மூலையிலோ வரும்படி அமைக்கணும். ஈசான்ய மூலை பூஜை அறை அமைக்க ஏற்ற இடம். படுக்கயறைக்குள் வரும்படி அமைக்கக்கூடாது.
- சாமி படங்கள் மேற்குப் பார்த்தபடியும், சாமி கும்பிடுபவர்களின் முகம் கிழக்கு நோக்கியும் இருப்பது வாஸ்துப்படி சிறப்பானதாகும்.
- தென்கிழக்கு திசையிலேயே சமையல் அறையை அமைக்கணும். தென்கிழக்கு என்பது அக்னிக்கு உரிய திசையாகும். அதனால் அக்னி மூலை எனப்படும் தென்கிழக்கு திசையிலேயே சமையல் சமையல் அறையை அமைக்கணும்.
- படுக்கையறை கிழக்கு வடக்கு சுவர்களில் அதிக ஜன்னல்கள் இருக்க வேண்டும். படுக்கையறை கதவு சுவரின் வடக்கு, கிழக்கு அல்லது மேற்கு பக்கமாக இருக்க வேண்டும்.
- குளியலறைக்கு போதுமான காற்றோட்டம் அவசியம். கிழக்கு அல்லது வடக்கு திசையில் ஜன்னல்களை அமைக்கணும். இயற்கை ஒளி மற்றும் காற்று வருமாறு அமைப்பது முக்கியம்.
- தென்கிழக்கு சமையலறைக்கு அடுப்பு என்பது தென்கிழக்கு சார்ந்த கிழக்கு பார்த்து சமைக்கும் அமைப்பாக இருக்கணும். வடமேற்கு சமையலறையில் அந்த அறையின், தென்கிழக்கு பகுதியில் கிழக்கு பார்த்து சமைக்கணும்.
- வாஸ் பேசினில் கண்ணாடி வைக்க வேண்டும் என்றால் அதை மேற்கு, தெற்கு பகுதியில் வைக்கலாம். மற்ற இரு திசைகளில் வைக்கவே கூடாது. வீட்டில் மேற்கு, தெற்கு திசையில்தான் கண்ணாடிகளை வைக்க வேண்டும்.
- தென்மேற்கு மூலையில் தான் பீரோவை வைக்கணும். தெற்கு திசைக்கும் மேற்கு திசைக்கும் இடையே உள்ள இடம் தென்மேற்கு மூலை எனப்படும். இந்த மூலையில் மட்டுமே நாம் பீரோவை வைக்கணும்.