சென்னை: ஏசி வாங்குவது பெரிதல்ல. அதை முறையாக பராமரிக்கணும். என்ன செய்யணும் என்று தெரியுங்களா?
- ஏ.சி வாங்கும் போது வீட்டில் நீங்கள் பொருத்தும் இடத்தின் சதுரடியை கணக்கில் கொள்ளுங்கள். உங்கள் அறை மொத்தம் 100 சதுரடி கொண்டிருந்தால் 1 டன் அளவுள்ள ஏ.சி போதுமானது.
- ஏ.சி வாங்கும் போது நல்ல தரமான ஸ்டெபிலைசரை தேர்வு செய்யணும். அதே போன்று ஏ.சியில் உயர் மின்னழுத்தத்தை தாங்க கூடிய அளவுக்கு கேபிள், சுவிட்ச் போன்றவற்றை பயன்படுத்தணும்.
- ஏ.சியை நீங்கள் படுக்கும் இடத்திலிருந்து குறைந்தது ஆறடி உயரத்துக்கு பொருத்துங்கள். அப்படி செய்தால் தான் ஏ.சியிலிருந்து வெளியாகும் குளிர்ச்சி அந்த அறை முழுக்க கிடைக்கும்.
- ஏ.சி பொருத்தும் அறையில் சூரிய ஒளி நேரடியாக படக்கூடாது. அந்த மாதிரி இருந்தால் நீங்கள் அறையில் திரைச்சீலைகள் பயன்படுத்தலாம். சூரிய ஒளி அறைக்குள் இருந்தால் ஏ.சி குளிர்ச்சி அடைய சிறிது நேரம் பிடிக்கும்.
- அறை வாசனைக்கு வாசனை திரவியங்களை பயன்படுத்தும் ோது தவறுதலாக ஏ.சியின் மீது அடித்து விட கூடாது. ஏ.சியின் உள்ளிருக்கும் காயிலில் பட்டுவிட்டால் காயில் பழுதாகி விடும்.
- ஏ.சி இருக்கும் அறையில் அதிக பொருள்களை வைக்கக் கூடாது. சியமான பொருள்களை வைப்பதாக இருந்தாலும் அறையில் கப்போர்டு போட்டு வைப்பதால் ஏ.சி வீணாகாது.
- ஏ.சி பயன்படுத்தும் போது அதிக டிகிரியில் வைக்க கூடாது. 23-24 அளவில் பழக்கப்படுத்தி கொள்ளலாம். 22 டிகிரிக்கு கீழ் வைக்க கூடாது. ஏ.சி பயன்படுத்தும் போது அறையில் ஃபேனையும் ஓடவிடக்கூடாது.
- மாதமிருமுறை ஏ.சி ஃபில்டரை கழற்றி சுத்தம் செய்ய வேண்டும். இதில் இருக்கும் தூசி ஏ. சி யை நீண்ட நாட்களுக்கு பிறகு இயக்கும் போது வெப்பம் உருவாகும் போது தீப்பற்றி வெடிக்க செய்யும்.
9.ஆறு மாதங்களுக்கு ஒரு முறை ஏ.சி சர்வீஸ் செய்ய வேண்டும். அனுபவமிக்க ஏ.சி மெக்கானிக்குகளை கொண்டு சர்வீஸ் செய்ய வேண்டும்.
- ஏ.சி சர்வீஸ் செய்யும் போது கம்ப்ரஸர்,காயில், ஏ.சியின் உள்ளே செயல்படும் ஃபேன் மோட்டார்கள், உள்ளிருக்கும் பெல்ட், கேஸ் அளவு அனைத்தையும் சரிபார்ப்பதும் அவசியம்.